தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

 

பால் பதப்படுத்தும் நிறுவனம்

Milk

இந்திய பால் பதப்படுத்தும் நிறுவனம் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு உணவுப் பொருட்களின் சத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனத்தின் வெளியீட்டு மதிப்பு 1990-ல் ரூ.2,75,080 மில்லியனிலிருந்து 1994-95ம் ஆண்டு ரூ.5,00,510 ஆக உயர்ந்தது. இது கி.பி.2000-ல் ரூ.8,50,000 மில்லியன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக மொத்த கால்நடை எண்ணிக்கை 1420 மில்லியனில் 288 மில்லியன் எண்ணிக்கையை கொண்டு இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. 1992-ம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 62.90 மில்லியன் கரவைமாடு ரகங்களும் (மாநில வாரியாக, ரக வாரியாக விவரங்கள் அட்டவணை 1-ல்) குறிப்பிடப்பட்டுள்ளது. கலப்பின ரக கறவை மாடுகள் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மற்றும் உத்திரபிததேசம், எருமை மாடுகள் பொதுவாக உத்திரபிரதேசம், ஆந்திர பிரதேசம், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பங்சாப், பீஹார், கர்நாடகா, ஹரியானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளது.

பால் உற்பத்தியில் 1951-ம் ஆண்டு 17 மில்லியன் டன்னிலிருந்து 1997-ல் 70.1 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 1980 முதல் 1990 வரை பால் உற்பத்தியின் உச்ச வளர்ச்சியாக இருந்தது. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் உத்திர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்கள் 85% பங்கு வகிக்கிறது. தற்போது அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலக அளவில் இந்தியா  இரண்டாவது பெரிய பால் உற்பத்தியாளர் இடத்தை வகிக்கிறது. தற்போது பால் அளவு 205 கிராமாக உள்ளது. இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் 250 கிராம் என பரிந்துரைத்துள்ளது. மாநில அளவிலான பால் உற்பத்தி 1992-93  மற்றும் 1996-97-ம் ஆண்டு இலக்கு அதனுடன் தனி நபர் பால் கிடைக்கும் தன்மை ஆகியவை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான கால்நடை மற்றும் எருமை மாடுகள், பால் உற்பத்தி மற்றும் தனிநபர் பால் கிடைக்கும் தன்மை

எண்

மாநிலங்கள்

கால்நடைகள்

எருமைகள்

பால் உற்பத்தி

தனி நபர் கிடைக்கும் அளவு

 

 

கலப்பினம்

நாட்டு ரகங்கள்

மொத்தம்

 

1992-93

1996-97 இலக்கு

1994-95

1.

ஆந்திர பிரதேசம்

221

2411

2632

4729

4221

4400

163

2.

அருணாச்சல
பிரதேசம்

7

88

95

3

22

44

64

3.

அஸ்ஸாம்

136

2931

3067

298

698

740

80

4.

பிஹார்

65

5301

5366

2586

3250

3390

97

5.

கோவா

4

26

30

20

36

39

81

6.

குஜராத்

126

1990

2116

3130

4459

4750

280

7.

ஹரியானா

159

543

702

2220

4062

4062

630

8.

இமாச்சல் பிரதேசம்

122

602

724

468

663

700

332

9.

ஜம்மு காஷ்மீர்

251

774

1025

417

780

900

257

10.

கர்நாடகா

277

3605

3882

2315

3004

3260

173

11.

கேரளா

905

825

1730

110

2117

2370

192

12.

மத்திய பிரதேசம்

89

8590

8679

3501

5048

5205

195

13.

மகாராஷ்டிரா

897

4879

5776

3201

4811

5200

156

14.

மணிப்பூர்

28

147

175

38

64

62

89

15.

மேகாலயா

10

190

200

10

54

57

77

16.

மிசோரம்

3

21

24

3

14

18

51

17.

நாகாலாந்து

45

71

116

10

46

44

92

18.

ஒரிசா

262

3965

4227

434

584

650

48

19.

பஞ்சாப்

730

449

1179

2808

6215

7100

795

20.

ராஜஸ்தான்

43

4478

4521

4091

5103

5350

296

21.

சிக்கிம்

16

48

64

1

32

34

200

22.

தமிழ்நாடு

800

2493

3293

1552

3695

3867

174

23.

திரிபுரா

44

255

299

7

38

40

35

24.

உத்திர பிரதேசம்

648

6297

6945

10097

11321

12463

209

25.

வங்காள தேசம்

430

5256

5686

10097

11321

12463

209

26.

யூனியன் பிரதேசம்

41

62

103

174

364

387

80

 

மொத்தம்

6359

56297

62656

42456

63951

68581

191


கணக்கெடுப்பு – ஆயிரங்களில்  (1992 கணக்கெடுப்பு)
உற்பத்தி – ஆயிரம் டன்களில்
கிடைக்கும் தன்மை – கிராமில்

இத்துறையின் முக்கியதுவத்தை உணர்ந்து பின்வரும் திட்டங்களான சிறப்பு கிராம திட்டங்கள், தீவிரமான கால்நடை மேம்பாட்டுத்திட்டம், இரு ரகங்களின் உதவியுடன் கலப்பு ரக திட்டங்கள், பால்வள மேம்பாட்டுத் திட்டம், பால்வள மேம்பாடு மற்றும் செயல்பாட்டுத் திட்டம், மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை தேசிய பால்வள மேம்பாட்டுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

1970-ல் தேசிய பால்வள மேம்பாட்டுத் துறை மூலம்  பால் வள மேம்பாடு செயல்பாட்டு திட்டம் துவங்கப்பட்டு பால் பண்ணை துறையை நவீன மயமாக்கி நான்கு நகரங்களில் மற்றும் பால்பண்ணை கூட்டுறவு நிறுவனங்களை அமைத்தது. 1996-97-ம் ஆண்டு இறுதியில் 74,883 கிராமங்களில் கிராம பால் உற்பத்தியாளர் கூட்டு நிறுவனங்கள் 264 மாவட்டங்களில் துவங்கப்பட்டு சராசரி கிராம பால் சேமித்தல் நாள் ஒன்றிற்கு சராசரி 1226 மில்லியன் லிட்டராக உள்ளது. மற்றொரு திட்டம் 1989-ம் ஆண்டு ஊரக வருமானத்தை பெருக்குவதற்காக பால்வள மேம்பாடு தொழில்நுட்ப அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பால் உற்பத்தியை அதிகரித்தல், செலவினங்களைக் குறைத்தல் மற்றும் இது பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க உத்திரவாதம் அளிக்கிறது.

இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதை தொடர்ந்து பால் பண்ணை துறைகளுக்கு பதிவு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு ஜீன் 9-ம் நாள் இந்திய அரசாங்கம் பால் மற்றும் பால் பொருட்களான உத்திரவை வெளியிட்டது. அதன்படி நாள் ஒன்றிற்கு 1000 லிட்டருக்கு மேல் கையாளுபவர்கள் பதிவு செய்தல் அவசியமாகும்.  பதிவு செய்யும் அதிகாரம் மாநில அரசு மற்றும் சிறப்பு பிரதேசங்களின் அலுவலர்கள் ஆகியோருக்கு உள்ளது. பால் பண்ணை 75000 லிட்டர் ஒரு நாளைக்கு அல்லது 3750 MT பால் பொருட்கள் வருடத்திற்கு கையாண்டால் அதை பதிவு செய்யும் அதிகாரம் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை துறை, வேளாண் அமைச்சகத்திற்கு உள்ளது.

பால் கொள்முதல் மற்றும் பதப்படுத்துதல்

ஒழுங்குபடுத்தப்பட்ட பால் பண்ணை துறை (கூட்டுறவு மற்றும் தனியார் துறை) தற்போது 10 – 12 சதவீதம் மட்டுமே நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் கையாள்கிறது. கூட்டுறவு துறையின் பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் பதப்படுத்துதல் துறையின் இலக்கு மற்றும் சாதனை எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் அட்டவணை II –ல் கொடுக்கப்பட்டுள்ளது. பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் தேவை அதிகம் இருப்பதை இது குறிக்கிறது.

ஏற்றுமதி செயல்பாடுகள்

கால்நடை பொருட்கள் ஏற்றுமதியில் பால் பொருட்கள் அதிகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. முக்கிய ஏற்றுமதி பொருட்களான பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், நெய் மற்றும் பாலாடை கட்டி ஆகியவை வங்க தேசம், அரேபிய நாடுகள், நேபாளம், இலங்கை, பஹரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செயல்பாடுகள் 1980-81-ம் ஆண்டிலிருந்து 1995-96-ம் ஆண்டு வரை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


பால் பொருட்கள்  ஏற்றுமதி (வருடம் வாரியாக)

வருடம்

அளவு (டன்கள்)

விலை (ரூ.கோடிகளில்)

1980-81

1084

1.99

1985-86

395

1.04

1990-91

604

2.4

1991-92

2643

11.24

1992-93

3800

8.37

1993-94

2031

12.47

1994-95

8957

40.11

1995-96

NA

32.57

ஏற்றுமதி செறிவாற்றல் மற்றும் சந்தைகள்

வங்கதேசம், அரபு நாடுகள், நேபாளம், இலங்கை மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் பால் பொருட்களான வெண்ணை மற்றும் பால் பொருட்களின் ஏற்றுமதி தற்போது இருக்கும் சந்தைகளின் ரூ.285 மில்லியனும், புதிய சந்தைகளில் ரூ.155 மில்லியனும் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ரூ.440 மில்லியனை அடுத்த நூற்றாண்டில் தொடும் என (APEDA estimates) எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக காப்பு வரி மற்றும் அரசாங்க உத்தரவு மேலும்  பால் பண்ணைகளுக்கு கடன் உதவி வழங்கி எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலும் புதிய பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்த முதலீடு வழங்குவதோடு தொழில் முனைவோருக்கு புதிய தொழில் மற்றும் தொழிற்நுட்பங்களைப் பற்றி வழிமுறை வழங்குகிறது.

இத்திட்டத்தின் நோக்கங்கள்

பால் பதப்படுத்துதல் கீழ்காணும் குறிக்கோள்களுடன் விரிவாக்கப்பட்டுள்ளது.

  1. விவசாயிகளுக்கு பொருளாதார நட்டம் ஏற்படாமல் பாலின் தரத்தை செம்மைப்படுத்துதல்.
  2. பலவகையான பால் பொருட்கள் தயாரித்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கும்படி செய்தல்

திட்டத்தின் வகைகள்

நிதியாதாரங்களைக் கொண்டு பால் பதப்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

i) பால் குளிரூட்டும் நிறுவனம்

இத்திட்டம் கிராமங்களில் இருந்து 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டி முக்கிய பால் பண்ணைகளுக்கு  அடுத்த சுழற்சிக்காகவும் மற்ற பால் பொருட்கள் தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது.


ii) பால் கொள்முதல் நிறுவனம்

இது கிராமங்களில் இருந்து பால் கொள்முதல் செய்து குளிரூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் தரம் வாரியாக வகைப்படுத்தி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. அதில் எஞ்சிய கொழுப்பு, நெய், வெண்ணை அல்லது பால் கட்டிகளாக கடைகளுக்கு விற்கப்படுகிறது.

iii) பால் பதப்படுத்தும் நிறுவனம்

இத்திட்டத்தில் பால் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு பால் மற்றும் பால் பொருட்களான பால் பவுடர், பால் கட்டி, வெண்ணை, நெய் ஆகியவை சந்தைப்படுத்தப்படுத்துகின்றன.

செயல்படும் பகுதிகள்
பால் பதப்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அதிகமாக செயல்படுகிறது. இது நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பால் பதப்படுத்துதல் குறைவாக உள்ளது. ஏனெனில் முழு வளங்களையும் பயன்படுத்தாமை ஆகும். பால் உற்பத்தியும் பற்றாக்குறையும் இப்பகுதிகளில் நிலவுகிறது.

பயனாளிகள்
தனி நபர்கள், கூட்டுத்தொழில் முளைவோர், நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள், இதன் மூலம் பயனடைகின்றனர்.

திட்டத்தின் விவரங்கள்

  1. நிலம் மற்றும் அமைப்பு
    i)கட்டிடம், எதிர்கால விரிவாக்கம், போக்குவரத்து வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் காலியான கேன்களை வைப்பதற்கு தாராளமான இடம் தேவைப்படுகிறது. பால் பதப்படுத்தும் நிறுவனம் 10,000 லிட்டர்கள் நாள் ஒன்றிற்கு கையாண்டால் (எட்டு மணிநேரம்) இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும். கட்டிடம் மொத்த இடத்தில் 1:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
    ii)இந்நிறுவனத்தில் அமைவிடம் பால் உற்பத்தி இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும். பொருட்கள் தயாரிக்கும் பிரிவு அதாவது திரவ பால் முக்கிய தயாரிப்பாக இருந்தால் நுகர்வோருக்கு அருகாமையில் இருக்க வேண்டும்.
    iii)சாலை, ரயில் போக்குவரத்து வசதி, மற்ற தேவைகளான தண்ணீர், மின்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் பால் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு இடம் அமைக்க வேண்டும்.
    iv)முறையான சாக்கடை வசதியுடன் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  2. இட மேம்பாடு
    i)மொத்த இடமும் சேர்த்து  கம்பி வேலி அல்லது சுவர் எழுப்பி வாயிற் கதவு அமைப்பது அவசியமாகும்.
    ii)உள்வழி சாலைகள் அதாவது தார் (அல்லது) செங்கள்களை மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தி அமைக்க வேண்டும். ஏனெனில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் மழை காலங்களில் சிரமம் ஏற்படாமல் இருக்கும்.
  3. வடிவமைப்பு மற்றும் கட்டிடங்கள்
    கட்டிடப் பணிகள், தொழிற்சாலை கட்டிடம், குடியிருப்புகள், அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. தொழிற்சாலை கட்டிடம், வரவேற்பறை, தரக்கட்டுப்பாடு, பதப்படுத்துதல், தொகுத்தல் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேகரித்தல் போன்றவை BIS முறைப்படி அமைக்க வேண்டும். மொத்த இடத்தின் செயல்பாடுகள் பொருட்கள் தயாரித்தல், பால் தரத்தை கையாளுதல் மற்றும் கருவிகளை சேவை மற்றும் பொருட்கள் தயாரிக்க தேர்ந்தெடுத்தல் ஆகியவை உள்ளடங்கும். 1000 லிட்டர் பால் கையாளுவதற்கு 4000 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.

பால் பதப்படுத்தும் நிறுவனத்தின் முக்கிய பிரிவுகள்

பால் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு கீழ்காணும் வசதிகள் அவசியமாகும்.

  • பால் பதப்படுத்தும் அறை
  • சேமிக்கும் இடம் – பால் சேகரிக்கும் தொட்டிகள்
  • பொருட்கள் தயாரிக்கும் இடம் - கையாளும் பொருட்களின் வகை மற்றும் தரம் ஆகியவற்றை பொருத்து கருவிகள் அமைத்தல் வேண்டும்.
  • உறையிடும் இடம் – பால் மற்றும் பால் பொருட்களை
  • குளிர் சாதன கிடங்கு – பால் மற்றும் பால் பொருட்களை சந்தையிடும் வரை பாதுகாத்தல்
  • தர கட்டுப்பாட்டு ஆய்வுக் கூடம் – பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஆராய்தல்
  • Utilities area – கொதிகலன் அமைத்தல், ஜனனி, நீர் சுத்திகரிப்பு கலம் நிர்மானித்தல் மற்றும் உதிரி பாகங்கள் சேகரிக்கும் அறையமைத்தல்.
  • கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் – கழிவுகளை வெளியேற்றுவதற்கு முன் சுத்திகரித்தல்
  • குடியிருப்புகள் மற்றும் அலுவலக வசதிகள் அனைத்தையும் பணியாளர்களுக்கு அமைத்துக் கொடுத்தல்.
  • வாகனங்கள் நிறுத்துமிடம் – பால் கொள்முதல் மற்றும் விநியோகிக்கும் வாகனங்களுக்காக
  • உள்ளிடு பொருட்கள் விநியோகிக்கும் இடம் – கால்நடை சேவை, உணவு வழங்குதல், தீவன விதைகள் வழங்குதல் போன்றவை.

நிறுவனத்தின் வடிவமைப்பு - நாள் ஒன்றிற்கு 10,000 லிட்டர்

வ.எண்

விவரம்

அளவு

குதிரை திறன்

கொள்ளளவு/திறன்

1.

சுழலும் குழாய்கள்  (Roller conveyor)

1

-

5 மீட்டர்கள்

2.

சேமிப்புக்கலன்

1

-

1000 லிட்டர்கள்

3.

பால் பம்ப்

1

2.5

5000 lph

4.

சமமான மிதக்கும் கலன்

1

-

100 லிட்டர்கள்

5.

பால் மேலேற்றுவான்

1

2.6

5000 lph

6.

சாதாரன வடிகட்டி

1

-

-

7.

நோய் கிருமி நீக்குவான்

1

-

5000 lph

8.

கொள்கலன்

1

-

-

9.

கட்டுப்பாட்டு மையம்

1

-

-

10.

பால் கொண்டு செல்லும் பம்ப்

1

210

5000 lph

11.

நீர் சூடேற்றும் கருவி

1 செட்

1.5

100000 KCal/hr

12.

சுடு நீர் பம்ப்

1

1.5

-

13.

மின் பலகம்

1 செட்

-

-

14.

தொலை கட்டுப்பாடு

1

-

-

15.

கலக்கும் கருவி

1

3.0

-

16.

பனிக்கட்டி சேமிப்புக்கலன்

1

-

-

4.தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள்:
பகுதிவாரியான கருவிகளின் தேவை, அதன் சிறப்பம்சங்கள் ஆகியவை மற்றும் 10000 லிட்டர் அளவு மற்றும் அதற்கான செலவு ஆகியவை அட்டவணை 3-ல் குறிப்பிப்பட்டுள்ளது. இயந்திரங்கள் BIS ன் படி இருக்க வேண்டும். பெரும்பாலான பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் நாட்டில் ஆல்ஃபா லாவல், எல்&டி, ஹெச்.எம்.டி, நிக்ரோம் (பி) லிமிடெட், சமர்பன் பேப்ரிகேட்ஸ், கோமா இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

5.தொழில்நுட்ப கலவை

பொதுவாக தெழிற்நுட்பக் கலவை இயந்திரங்கள் விநியோகித்தல், பொருட்களை தொழில்நுட்ப முறையில் எப்படி தயாரிப்பது மற்றும் சந்தையிடுவது ஆகியவை அடங்கும். கூட்டு முயற்சி முன்னேற்பாடுகள் ஆவன, நிறுவனத்தின் பெயர், நாடு மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை குறிப்பிடப்படும்.

6.தயாரிப்பு செயல்பாடுகள்

தயாரிப்பு செயல்பாடுகளின் நடவடிக்கைகள் வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

7.முலதனம் மற்றும் அடிப்படை வசதிகளின் உள் கட்டமைப்பு

1.மூலதனம்:

அடிப்படை மூலதனம் பால் ஆகும். பால் பண்ணைகளை விரிவாக்குதல், கறவை மாடுகளின் எண்ணிக்கை , சராசரி பால் உற்பத்தி, கறவைகளின் சதவிகிதம், சந்தையிடுதலின் உபரி போன்றவை நிறுவனத்தின் அமைப்பை தீர்மானிக்கின்றன. கொள்முதல் செய்யும் முறைகள், போக்குவரத்து, விவசாயிகளுக்கு உள்ளிடு பொருட்கள் விநியோகித்தல் ஆகியவை தெளிவாக காட்டப்பட வேண்டும். மற்ற உள்ளீடுகளின் கிடைக்கும் தன்மை அதாவது உறையிடு பொருட்கள், நோய் தொற்று இன்றி பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

2.சேவைகள்:

i)மின்சாரம்:

பொதுவாக பால் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு மும்முனை மினசார இணைப்பு தேவைப்படும். மின்சாரத் தேவை இணைப்பின் அளவைப் பொருத்து அமையும். மாவட்ட மின்சார வாரியத்திடம் அனுமதி வாங்குதல் அவசியமாகும். மின்சார இணைப்பின் நிலையைப் பொருத்து ஜனனிகள் முக்கியமான பகுதிகளுக்கு இணைக்கப்பட வேண்டும்.

ii)தண்ணீர்:

பொதுவாக பால் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு 2 : 1 என்ற விகிதத்தில் தேவைப்படும். (1 லிட்டர் பால் பதப்படுத்துவதற்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.) கருவிகளை சுத்தப்படுத்துவதற்கும், குளிர் சாதன சேமிப்பு கிடங்கு மற்றும் குடிநீர் (தண்ணீர் விநியோகிக்கும் காரணிகள், கிடைக்கும் அளவு மற்றும் சாதகமான சூழல் ஆகியவை) பொதுவாக கிணற்றின் அளவு தண்ணீரின் தரத்தைப் பொருத்து வடிவமைக்கப்படுகிறது.

iii)நீராவி:

நீராவியின் தேவை (கிகி/மணிக்கு) செயல்பாட்டை பொருத்தும் மற்றும் இது நிலக்கரி/எண்ணெய் எரிவாயு நெருப்பு / மின்சார கொதிகலன்.

iv)எரிபொருள்:

எல்.டி.ஓ/நிலக்கரி/எரிவாயு ஆகியவற்றின் தேவை மற்றும் கிடைக்கும் தன்மை வரையறுக்கப்பட வேண்டும்.

v)காற்றழுத்தம்:

இது தடையில்லா செயல்பாடுகள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கும் தேவைப்படுகிறது. மொத்த காற்றழுத்தக் கருவியின் தேவையும் காற்றழுத்தியின் கொள்ளளவும் வரையறுக்கப்பட வேண்டும்.

vi)வாகனங்கள்:

பால் கொள்முதல் செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு கையாளப்படும் பாலின் அளவைப் பொருத்து வாகனங்கள் தேவைப்படுகிறது. தேவைப்படும் வாகனங்களின் அளவு, கிடைக்கும் இடம், வாடகை போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். தேவைப்படும் வாகனங்களின் செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டில் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

vii)மற்ற சேவைகள்:

பராமரிப்புத் துறை பால் பதப்படுத்தும் கருவிகளை பராமரிப்பதற்கும் பழுது பார்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

viii)தகவல் தொடர்பு:

முறையான தகவல் தொடர்பு வசதிகள் அவசியமாகும்.

8.மனித வளம்

தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்த பிறகு தேவைப்படும் மனித வளத்தை பால் கையாளும் அளவைக் கொண்டு கணக்கிட வேண்டும். நிறுவனம் 10,000 விட்டர் பால் ஒரு நாளைக்கு கையாண்டால் தேவைப்படும் மனிதவளம் இணைப்பு IVல் குறிப்பிடப்பட்டுள்ளது.

9.சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு

பால் பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆபத்தான காரணிகள் உருவாகின்றன. கழிவு பொருள் சுத்தீகரித்தல் நிலையம் இது போன்ற பெரிய அளவில் ஆபத்தான கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்களில் அவசியமாகும். கடைநிலை கழிவு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டும்.

10.அட்டவணைப்படி நடைமுறைப்படுத்துதல்

செயல்பாடுகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துதல் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

11.பொருட்கள்

முக்கிய பொருட்கள் உப பொருட்கள் தயாரிக்கப்படும் அளவு, அதன் கொழுப்பின் அளவு மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருள் (SNF) அதன் செலவினங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

12.சந்தை மற்றும் விற்பனை நடவடிக் கைகள்

பொருட்களின் சந்தை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) விற்பனைக்கு விநியோகிக்கும் ஏற்பாடுகளின் வகைகள், தரகர்களின் கட்டணம் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டவை, தேவைப்படும் வலைதளம் மற்றும் விளம்பரத் திட்டங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். விரிவான சந்தை கருத்தாய்வு முடிவுகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

13.தொழில் கணிப்பு

இதில் பலவகையான பொருட்களின் தற்போதைய தேவை மற்றும் உற்பத்தி அடங்கியுள்ளது. உற்பத்தி இடைவெளி மற்றும் எதிர்பார்க்கும் தேவை பலவகையான பொருட்களுக்கு  இதில் அடங்கியுள்ளது. முக்கிய போட்டியாளர்கள் அவர்களின் தற்போதைய பங்கு ஆகியவை கணிக்கப்படுகிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் அடிப்படை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். பொருட்கள் ரீதியாக அளவு மற்றும் அவை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

ஆதாரம் : http://www.nabard.org/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014